I read and heard from many sources that this movie titled ‘Santosh Subramaniyam’ is one of the best to have happened in the recent times. Quite a few of my friends who had seen ‘Bommarilu’ - the orginal version of this movie in Telugu went gaga about it as well. More often than not, watching a movie with such a hype takes your expectation levels sky high and this is what happened when I happened to watch ‘Santosh Subramaniyam’ yesterday.
To be honest, it is a neat family entertainer packed with good songs, decent comedy and what not. With very few exceptions, I haven’t seen many movies that places importance to the role of female character lead. ‘Santosh Subramaniyam’ is one such exception. Genelia in the lead role is very live and bubbly and it is obvious that Jeyam Ravi has found it tough to cope up with her. In fact, so powerful was Genelia’s innocent character that the role is the main strength of that movie. However, by unnecessarily overplaying certain aspects of the character is in a way irritating.
Leaving aside these drawbacks, it is certainly a nice movie to watch and one must appreciate the director for presenting a serious storyline in a light hearted way laced with humour. Certainly worth watching, at least once.
—
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்ற படத்தை நேற்று பார்க்க நேரிட்டது. பார்ப்பதற்கு முன்னர் அதனை வானளாவ புகழ்ந்த விமரிசனங்கள் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
அருமையான பாடல்கள், நல்ல நகைச்சுவையுடன், அனாவசிய குத்து பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமின்றி குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் என்பதில் சந்தேகமில்லை. அண்மைக் காலங்களில் வந்த திரைப்படங்களில், குறிப்பாக நான் பார்த்தவற்றில் கதாநாயகியின் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டவை வெகு குறைவு. சந்தோஷ் சுப்பிரமணியம் அந்த குறையை நன்றாகவே போக்குகிறது. ஜெனிலியாவின் துறுதுறுப்பான நடிப்பிற்கு ஈடு கொடுப்பது ‘ஜெயம்’ ரவிக்கு பெரும் சவாலாக உள்ளது. சொல்லப் போனால், ஜெனிலியாவின் வெள்ளந்தியான பாத்திரம் தான் இந்த படத்தின் பலம். ஆனால், அதையே திரும்பத் திரும்ப, சற்று அதிகப்படியாக காட்டுவது சலிக்கிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் தேவையில்லாமல் தொய்வை ஏற்படுத்துபவை இவை.
குறைவாகவே உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் படத்தைப் பார்த்தால், ஒரு சீரியசான கருவை நல்ல நகைச்சுவையோடு கொடுத்ததற்கு மூலக்கதாசிரியரையும், இயக்குனரையும் பாராட்டத்தான் வேண்டும். Certainly worth watching, at least once.