Archive for November, 2007

ஸ்ரீரங்கம்
Friday, November 30th, 2007

என்னுடைய கல்லூரி நாட்களில் மூன்று வருடங்கள் ஸ்ரீரங்கத்தில் வசித்திருக்கிறேன். மூன்றே வருடங்கள் தான் என்றாலும் என் வாழ்வில் மிகச்சிறந்த வருடங்களாக நான் கருதுபவை அவை. அந்த ஊரை விட்டு வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களான பின்னரும் ஸ்ரீரங்கம் என்ற பெயரைக் கேட்டால் ஒரு வித தனி உற்சாகம் பீறிட்டு வருகிறது. இத்தனைக்கும் ஸ்ரீரங்கம் எனது சொந்த ஊர் கூட இல்லை. அதே ஊரில் எங்களுக்கு திருமணம் நடந்ததென்பது ஒரு இனிமையான coincidence.
சென்னையிலிருந்து ரயிலில் திருச்சி செல்லும் [...]

சென்னை அனுபவங்கள் – 2
Thursday, November 29th, 2007

** தீபாவளியின் சுரத்து மக்களிடம் ரொம்பவே குறைந்து விட்டது. தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள நெரிசலும், ஸ்வீட் கடைகள் முன்புள்ள கூட்டமும் தான் தீபாவளியை உணர்த்துகின்றன. தீபாவளிக்கு முதல் நாள் மாலை வரை பட்டாசு சத்தம் எதுவுமே கேட்கவில்லை.
** சென்னையில் நிறைய தாழ்தள பேருந்துகள் வந்து விட்டன. தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
** குளிர் சாதன வசதி செய்யப்பட மாநகர பேருந்துகள் சிலவற்றையும் பார்த்தேன். மிக மிக சொற்ப மக்களே அம்மாதிரியான [...]

சென்னை அனுபவங்கள் – 1
Tuesday, November 27th, 2007

இந்தியாவில் மூன்று அட்டகாசமான வாரங்களை கழித்த பின்னர் இங்கிலாந்து திரும்பியுள்ளோம். இரண்டு வருடங்களுக்கு பின்னர் இந்தியாவை பார்த்ததில் பல விஷயங்கள் புதுமையாக இருந்தது. இப்பொழுதுள்ள சென்னை – நான் பார்த்து, ரசித்து, வசித்து, வளர்ந்த சென்னையிலிருந்து வெகு தூரம் வந்துவிட்டது. என் அனுபவங்களில் சில……
** சென்னையில் எந்த பிரதான சாலைக்குள் நுழைந்தாலும் தொழில்நுட்ப பூங்கா என்ற பெயரில் குறைந்தது ஒரு பிரிமாண்ட கட்டிடமாவது இருக்கிறது.
** எல்லா பகுதிகளிலும் மேம்பாலமோ, தரைப்பாலமோ – ஏதோ ஒன்று கட்டிக்கொண்டே [...]

Air France, Deepavali etc
Saturday, November 10th, 2007

Air France sucks. They suck big time. Avoid them at any cost, unless they offer the tickets for free.
In the name of breakfast, they served us all a muffin, which would probably be the smallest one in the world. Next, they flew us to Chennai without our baggages. Two days later, they delivered a part [...]

Happy Deepavali
Friday, November 2nd, 2007

எட்டு வருடங்களுக்கு பின்னர் இந்தியா சென்று தீபாவளி கொண்டாட உள்ளோம். அதை விட 12 வருடங்களுக்கு பின்னர் என் கல்லூரி நண்பர்களை சந்திக்கவிருக்கும் நிகழ்ச்சியை தான் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். மூன்று வராங்களில் சந்திப்போம்.