Archive for August, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்
Wednesday, August 13th, 2008

“கோலாகலம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தை சீனாவில் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் துவக்கவிழாவை தொலைக்காட்சியில் பார்த்தபோது தான் உணர்ந்தேன். விழா துவங்கும் முன்னர் நடந்த countdown-லிருந்து ஒவ்வொரு செய்கையிலும் பிரமிப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தனர். சீனாவின் கண்டுபிடிப்புகளான காகிதம், அச்சு இயந்திரம் ஆகியவற்றைப் பற்றி அவர்கள் செய்து காண்பித்த நிகழ்ச்சி – அப்பப்பா.. என்னவொரு கற்பனை, என்னவொரு திட்டமிடல், எப்பேர்ப்பட்ட செயலாக்கம். நினைத்தாலே புல்லரிக்கிறது. ஒலிம்பிக்ஸ் துவங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே சீனாவைப் பற்றி வந்திருந்த சர்ச்சைகளையெல்லாம் [...]

சந்திப்பு
Tuesday, August 5th, 2008

வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள மிகப் பெரிய அசௌகரியங்களில் ஒன்று – நம்மூரைப் போல் நினைத்த மாத்திரத்தில் நண்பர்களையோ, உறவினர்களையோ அடிக்கடி சந்திக்க முடியாமலிருப்பது. அதுவும் லண்டன்-ஐ விட்டு சற்று தூரத்திலிருக்கும் நகரங்களில் வசித்தால், எப்போதாவது பிறந்த நாள் விழா அல்லது வேறு ஏதாவது பார்ட்டிக்களில் சக இந்தியர்களை சந்திப்பது தான் அவ்வப்போது நடக்கும் தொலைபேசி உரையாடல்கள் தவிர இருக்கும் மிகப் பெரிய social distraction! வீட்டிற்கு யாரவது வர மாட்டார்களா, யாருடுனாவது அர்த்தமில்லா அரட்டையடித்து பொழுது போக்க [...]