Archive for October, 2008
கடந்த 9 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டைத் தவிர (2007) மற்றெல்லா வருடங்களும் தீபாவளியன்று இங்கிலாந்தில் தான் இருந்திருக்கிறோம். சொல்லி வைத்தாற் போல தீபாவளி வார நாட்களில் தான் வரும். வருடம் தவறாமல் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விடுவேன். இருந்தாலும், கொண்டாட்டம் என்பது காலையிலிருந்து நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வாழ்த்தனுப்பி விட்டு, நன்றாக சாப்பிட்டு, ஊருக்கு தொலைபேசுகையில் பட்டாசு சத்தத்தின் நடுவே குசலம் விசாரிப்பதுடன் முடிந்து விடும். இந்த மாதிரி நேரங்களில் தான் எப்பொழுது இந்தியா திரும்பப் [...]
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னரே எழுத நினைத்திருந்த பதிவு. இப்பொழுது தான் எழுத நேரம் வாய்த்தது.
—–
“நான் இந்த வருஷம் தீபாவளிக்கு திருச்சி வரேன். நீயும் அங்க தானே இருப்பே? மீட் பண்ணுவோமா?” – நண்பர்கள் இருவருக்குள் மேற்கண்டவாறு தொடங்கிய ஒரு சாதாரண மின்னஞ்சல் உரையாடல் வெகு சில மணி நேரங்களில் வளர்ந்து, பெரியவனாகி பல்லாண்டுகளுக்கு பின்னர் கல்லூரி நண்பர்கள் பலர் கூடி, சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கித்தந்தது.
திருச்சி தேசிய மாலை நேரக்கல்லூரியில் 1996-ஆம் ஆண்டு, இளம் [...]
SPB மாதிரி உடம்பிருந்தாலும் எடையில் சதமடித்துவிட்டு உடம்பை குறைப்பது தான் நல்லது என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை – “கார்த்தால எழுந்து சும்மா உட்கார்ந்திருக்கற நேரத்துல கொஞ்ச நேரம் ஜாகிங் பண்ணிட்டு வந்த உடம்பாவது குறையுமே” என்று தங்கமணி உசுப்பேத்திவிட வேறு வழியில்லாமல் கொள்கையை சற்றே தளர்த்திக் கொண்டு நானும் ஓடத் தொடங்கினேன். மாடிப்படி இறங்குவதற்குள் எதற்கும் இருக்கட்டும் என்று ”இன்றிலிருந்து தினமும் 45 நிமிஷம் ஜாகிங் செய்வது” [...]
சில வருடங்களுக்கு முன்னர் சாண்டில்யனின் ‘ஜல தீபம்’ புத்தகத்தை (மூன்று தொகுப்புகள்) என் தங்கமணி எனக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். கதை நன்றாக இருந்தாலும், சில சொல்லாடல்களை திரும்ப திரும்ப உபயோகித்திருந்தது ஜல தீபத்தை ஒரு சுமாரான நாவலாக்கியது. ஜல தீபம் படிப்பதற்கு சில மாதங்கள் முன்னர் தான் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படித்திருந்ததால் சாண்டில்யனின் மேல் சொல்லும்படியான அபிப்பிராயம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை.
ஆனால், கடந்த சில நாட்களாக கீழே [...]
பண்டிகை நாட்களில் விடுமுறை இல்லாது, அலுவலகம் செல்வதென்பது மிகப் பெரும் கொடுமைகளுள் ஒன்று. ஆனால், என்னைப் போல வீட்டிற்கு அருகே அலுவலகம் இருப்பதில் ஒரு வசதி – மதிய உணவிற்க்கு (குறிப்பாக பண்டிகை நாட்களில்) வீட்டுக்கு சென்று வரலாம். இன்று அவ்வாறு வீட்டிற்குச் சென்றால் தலைவாழை இலை போடாதது தான் பாக்கி என்ற அளவில் வடை, பாயசத்துடன் ஒரு அட்டகாசமான கல்யாண சாப்பாடு. நான் சாப்பிட்ட அளவிற்கு காரை ஓட்டிக் கொண்டு வந்திருக்கக் கூடாது – தள்ளிக் [...]