இந்தியாவில் மூன்று அட்டகாசமான வாரங்களை கழித்த பின்னர் இங்கிலாந்து திரும்பியுள்ளோம். இரண்டு வருடங்களுக்கு பின்னர் இந்தியாவை பார்த்ததில் பல விஷயங்கள் புதுமையாக இருந்தது. இப்பொழுதுள்ள சென்னை – நான் பார்த்து, ரசித்து, வசித்து, வளர்ந்த சென்னையிலிருந்து வெகு தூரம் வந்துவிட்டது. என் அனுபவங்களில் சில……
** சென்னையில் எந்த பிரதான சாலைக்குள் நுழைந்தாலும் தொழில்நுட்ப பூங்கா என்ற பெயரில் குறைந்தது ஒரு பிரிமாண்ட கட்டிடமாவது இருக்கிறது.
** எல்லா பகுதிகளிலும் மேம்பாலமோ, தரைப்பாலமோ – ஏதோ ஒன்று கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
** காலை, மாலை வேளைகளில் வெள்ளை வெளேர் Volvo பேருந்துகளில் பாட்டு கேட்டுக்கொண்டோ அல்லது தூங்கிக்கொண்டோ வாழ்க்கையை தொலைத்த முகபாவத்துடன் மென்பொருளாளர்கள் பயணிக்கிறார்கள். அருகில் இருக்கும் சக பிரயாணிகளுடன் அவர்கள் பேசுவதாகவோ அல்லது குறைந்த பட்சம் சிரிப்பதாகவோ தெரிவதில்லை.
** விலை வாசி எக்கச்சக்கமாக எகிறி உள்ளது. ஸ்பென்செர் பிளாசாவில் உள்ள சரவணபவனில் இரண்டு பேர் மிக சாதாரண டிபன் சாப்பிட்டதற்கு கூசாமல் 250 ரூபாய் வாங்குகிறார்கள்.
** ஆதம்பாக்கத்தில் முதல் நாள் போட்ட சாலை மறுநாள் 30 நிமிடம் பெய்த மழையில் பல்லிளித்தது. அனேகமாக நிறைய சாலைகளின் கதி இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
** சென்னையில் ஏகப்பட்ட ஒரு வழி சாலைகள் முளைத்துள்ளன. அதில் பலவும் போக்குவரத்தை சீர் செய்ய உதவுவதாகவே தோன்றுகிறது. குறிப்பாக, சின்னமலை – ராஜ்பவன் – அலெக்சாண்டர் ஸ்கொயர் ஒருவழிப்பாதை அந்த இடத்தை விரைவாக கடக்க ஏதுவாக இருக்கிறது.
** வாங்கிப்போட்ட தலைக்கவசம் வீணாக்க மனமில்லாமல் இருசக்கர வாகன ஓட்டுனர்களில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் Helmet அணிவது ஆறுதலாக இருந்தது.
** ஊரில் உள்ள சிக்னல்களில் சிவப்பு விளக்கை கழற்றி எறிந்து விடலாம். சிவப்பு எறிந்தால் ஒரு பயலும் நிற்பதில்லை. அப்படி நின்ற சிலருக்கு பின்னால் வருபவர்களால் அர்ச்சனை வேறு.
** Fleet எதுவும் இல்லாமல் இறுக்கமாக சற்றே பளபளப்பான துணி வகையில் pant அணிவது தான் லேட்டஸ்ட் ஃபேஷன் போல இருக்கிறது.
** அழகான இளம் பெண்களில் 70 சதவிகிதித்தனர் டைட்டனின் Raaga Collection கடிகாரம் உபயோகிப்பதாக தெரிகிறது.
** படிக்கிறார்களோ இல்லையோ, நிறைய வீடுகளில் இரண்டு ஆங்கில செய்தித்தாள் வாங்குகிறார்கள்.
** ஒரு ஆட்டோகாரரிடம் பேரம் பேசும் பொழுது “என்ன சார், பாக்க சாப்ட்வேர் ஆளு மாதிரி இருக்கீங்க, 20 ரூபாய்க்கு மல்லுகட்றீங்க” எனக் கூறி திகைக்கவைத்தார்.
…….. மற்ற அனுபவங்கள் அடுத்த பதிவுகளில்.
This entry was posted on Tuesday, November 27th, 2007 at 11:19 am and is filed under General, Thamizh. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
November 27th, 2007 at 1:57 pm
பாக்க சாப்ட்வேர் ஆளு மாதிரி இருக்கீங்க, 20 ரூபாய்க்கு மல்லுகட்றீங்க — !!
விலை வாசி எக்கச்சக்கமாக எகிறி உள்ளது – I really wonder how the non-IT people are able to cope up with this madness !
November 27th, 2007 at 3:35 pm
[...] ச் Posted by பிரேமலதா on November 27, 2007 இரண்டு வருடங்களுக்கு பின்னர் இந்தியாவ [...]
November 28th, 2007 at 9:26 am
Kattupadi aagathu thala…last time when i went to chennai , i was suprised to find a high end pub full on a monday evening….enna mo ponga
November 28th, 2007 at 11:37 am
நிறைய மாற்றங்களை நீங்க கவனிக்க நேரமில்லை போலிருக்கிறது.இல்லை அடுத்த பதிவுகளில் போடுகிறீர்களோ என்னவோ? இன்னும் ரொம்ப மாறிப்போச்சு சென்னை.
அன்புடன்
கமலா
November 28th, 2007 at 3:19 pm
Very good recollection, especially the Raaga Collection watches.
It is only when people like you make a visit and write like this, we realise how much our local environment has changed. For us, the changes appear gradual and happen without we noticing them.
November 28th, 2007 at 4:57 pm
hi Chakra..hope you had a great time in India.. with the advent of IT everything has gone topsy-turvy..our regards to your family.
November 29th, 2007 at 5:13 am
Thambi,
You missed the most important thing – AC Volvo Pallavan buses! That was one welcome change, though they are very very few in number, and stores like Reliance Fresh, Fresh, Pazhamudhir Nilayam, Subhiksha, which are helping middle class people buy vegetables at reasonable prices….
And non-IT people like do suffer a lot bcoz of rising prices, that you IT guys have nurtured…..
Venkat
November 29th, 2007 at 11:59 am
Uma Krishna –
> I really wonder how the non-IT people are able to cope up with this madness ! – Sooner or later, even the IT ppl would find it difficult to cope up with.
Arulkumar - adhe daan… i had similar shocks as well.
Kamala - வருகைக்கு மிக்க நன்றி. மேலும் சில அனுபவங்களை அடுத்த பதிவில் பதிந்துள்ளேன்.
Chandrasekhar R – Correct aa note panna vendiyadhai mattum note panriye.
Dharshana - indeed, we had a great time.
Venkatachalam - konjam adangu da.