சென்னை அனுபவங்கள் – 2

** தீபாவளியின் சுரத்து மக்களிடம் ரொம்பவே குறைந்து விட்டது. தி.நகர் ரங்கநாதன் தெருவிலுள்ள நெரிசலும், ஸ்வீட் கடைகள் முன்புள்ள கூட்டமும் தான் தீபாவளியை உணர்த்துகின்றன. தீபாவளிக்கு முதல் நாள் மாலை வரை பட்டாசு சத்தம் எதுவுமே கேட்கவில்லை.

** சென்னையில் நிறைய தாழ்தள பேருந்துகள் வந்து விட்டன. தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

** குளிர் சாதன வசதி செய்யப்பட மாநகர பேருந்துகள் சிலவற்றையும் பார்த்தேன். மிக மிக சொற்ப மக்களே அம்மாதிரியான பேருந்துகளில் இருந்தனர். நான் பார்த்த நேரம் அப்படியா அல்லது கட்டணம் ரொம்ப அதிகமா தெரியவில்லை.

** நிறைய இடங்களில் குப்பைகளை தரம் பிரித்து போடும் படி மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், நான் பார்த்த வரை ஒரே குப்பை வண்டியில் தான் எல்லாவற்றையும் எடுத்துச்செல்கிறார்கள். என்ன லாஜிக்கோ? புரியவில்லை.

** ரங்கநாதன் தெருவில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் மற்றும் சட்டை விற்கிறார்கள். அமோகமாக விற்பனை ஆகிறது.

** சென்னை சிட்டி சென்டர் என்ற இடத்தைப் பற்றி இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளாமல் இருந்த மிகச்சிலரில் நானும் ஒருவன். ஒரு ஆரஞ்சு ஜூஸ் 140 ரூபாய்க்கும், சினிமா டிக்கெட் 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. எதையும் பொருட்படுத்தாமல் அங்கும் கூட்டம் அலை மோதுகிறது.

** தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நிறைய ATM Centre-களை திறந்துள்ளன. தனியார் வங்கிகளின் ATM-களை விட இவை அதிக எண்ணிக்கையில் உள்ளன.

** பெங்களூர் ஐயங்கார் பேக்கரியில் கிடைக்கும் “தில் பசந்த்” எனும் வஸ்து அதிக விலை ஏறவில்லை. 7 வருடங்களுக்கு முன்னர் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது, இப்போது 14 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

** Reliance Fresh, Spencers Express (formerly Foodworld) போன்ற கடைகள் நிறைய இருந்தாலும் அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்ப்படவில்லை.

** சென்னையில் எந்த திசையில் நின்று பார்த்தாலும் சிவப்பு வண்ண vodafone லோகோவை காண நேரிடும். புதிதாக மார்கெட்டில் நுழைந்திருப்பதால் பெயர் மற்றும் லோகோவை பிரபலப்படுத்துவதற்கு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

** வீடு மற்றும் காலி மனையின் விலை ஷேர் மார்கெட் போல தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது.

This entry was posted on Thursday, November 29th, 2007 at 11:55 am and is filed under General, Thamizh. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 Responses to “சென்னை அனுபவங்கள் – 2”

  1. Krish Says:

    வீடு மற்றும் காலி மனையின் விலை ஷேர் மார்கெட் போல தினமும்- மாறிக் கொண்டே இருக்கிறதா இல்லை ஏறிக் கொண்டே இருக்கிறதா?[:)]

  2. Krish Says:

    வீடு மற்றும் காலி மனையின் விலை ஷேர் மார்கெட் போல தினமும்- மாறிக் கொண்டே இருக்கிறதா இல்லை ஏறிக் கொண்டே இருக்கிறதா?[:)]

  3. Aravind Says:

    correcta mattera puttu puttu vecheenga. velachery train station is an update.

  4. Chakra Sampath Says:

    Krish – இப்போதுள்ள ஷேர் விலை போலத்தான் மாற்றம் ஒரே திசையில். :-) )

    Aravind – Spot on. thanks.

  5. Arun Sundar Says:

    Vividly put….Got a good feeling, reading about the high-lights at chennai….Azhagaa tamizh’la ezhudhareenga….Maelum thodara en vaazhthukkal :)

Leave a Reply